SC and ST Certificates – Governd Order
தமிழகத்தில் பொதுமக்களுக்கு SC Certificates and ST Certificates வழங்குவதில் அரசு அதிரடி உத்தரவு
பொதுமக்களுக்கு வருவாய், இருப்பிடம், சாதிச்சான்று உள்ளிட்ட 21 வகையான அத்தியாவசிய சான்றுகள் வருவாய்த்துறை அலுவலர்கள் வழங்குகிறார்கள்.
குறிப்பாக, SC Certificate 30 தினங்களில் வட்டாட்சியரும், ST Certificate 45 தினங்களில் வருவாய் கோட்டாட்சியரும் வழங்க வேண்டும் என்று அரசு சுற்றிக்கை இருந்தது.
ஆனால் பல்வேறு அலுவலகங்களில் மேற்படி காலக்கெடுவுக்குள் வழங்குவதில்லை என்று பொதுமக்களிடமிருந்து புகார் வரப்பெற்ற நிலையில்,
தற்போது அரசு SC Certificate 2 தினங்களிலும், ST Certificate 7 தினங்களிலும் வழங்க வேண்டும் என்று அதிரடி உத்திரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக சமுக நீதித்துறை அரசு செயலாளர் கடிதம் இ-3235-சா.மொ.1-2026-1, நாள் 22.07.2026 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளது.
ஆதிதிராவிடர்களுக்கு SC Certificate 2 தினங்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியரும், பழங்குடியினருக்கு ST Certificate 7 தினங்களில் சம்மந்தப்பட்ட கோட்டாட்சியரும் இனச்சான்று வழங்க வேண்டும் என்று அதிரடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும் ஐயம் ஏற்படும் நேர்வுகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் அம்மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அதன் விவரத்தினை மனுதாரருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும்,
அவ்வாறு உரிய நடவடிக்கை எடுக்காமலிருக்கும் சான்றிதழ் வழங்கும் அலுவலர்களின் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும்,
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சான்றிதழ் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கமாறும் அக்கடிதத்தில் அரசு செயலாளர் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்துள்ளார்.

