பட்டா மாற்றம் என்றால் என்ன? பட்டா மாற்றம் எத்தனை வகைப்படும்? பட்டா மாற்றம் அவசியம் செய்யப்பட வேண்டுமா?

பட்டா மாற்றம் என்பது விவசாய நிலம் அல்லது வீட்டுமனை ஆகியவை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு நபரிடமிருந்து கிரையம் பெற்ற பிறகு வருவாய்த்துறை அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்கும் ஆவணத்தில் மேற்படி கிரைய ஆவணத்தின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்படும் செயல் ஆகும்.

வருவாய்த்துறை அலுவலர்கள் பராமரிக்கும் ஆவணத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டவுடன் தங்களுக்கு பட்டா ஆவணம் வழங்குவார்கள். மேற்படி பட்டா ஆவணத்திற்கு வரிசை அடிப்படையில் பட்டா எண் வழங்கப்படும்.

இந்த பட்டா ஆவணம் மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு அறிவிக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக பயன்பெறவும், கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெறவும், பிற தனியார் வங்கிகளில் நிலத்தை அடமாணம் வைத்து கடன்பெறவும் முக்கிய ஆவணமாக பட்டா ஆவணம் பயன்படுகிறது.

பட்டா மாற்றத்தின் வகைகள்.

பொதுவாக பட்டா மாற்றம் 3 வகைகளில் ஒருவருக்கு கிடைக்கப்பெறும் நிலத்திற்கு மேற்கொள்ளப்படுகிறது.

1.ஒருவரிடமிருந்து கிரையம் மூலம் பெறும் நிலம்.

2.உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கிடைக்கப் பெறும் நிலம்.

3.முதாதையியர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் நிலம், இறப்புச்சான்று மற்றும் வாரிசு சான்று ஆகிய ஆவணங்களின் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்யப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *