பட்டா மாற்றம் என்பது விவசாய நிலம் அல்லது வீடு கட்டப்படும் நத்தம் ஆகியவை ஒரு நபரிடம் இருந்து சார் பதிவாளர் அலுவலகம் வாயிலாக பதிவு செய்து பெறும் போது, வருவாய்த்துறை அதாவது கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும் ஆவணங்களில் மேற்படி பதிவு ஆவணங்களின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்வது பட்டா மாற்றமாகும்.
இவ்வாறு பெறப்படும் பட்டா ஆவணம் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுதல், அரசு மற்றும் தனியார் வங்கிகளில் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெறுதல், அரசு விவசாயிகளுக்கு வழங்கும் பல்வேறு நலத்திட்டம் மற்றும் மானிய உதவி தொகைகளைப் பெற இந்த பட்டா ஆவணம் பயன்படுகிறது.
பட்டா மாற்றத்தின் வகைகள்.
பொதுவாக பட்டா மாற்றம் மூன்று வகைகளின் வாயிலாக செய்யப்படுகிறது.
1. நிலத்தை ஒருவரிடம் இருந்து கிரைய ஆவணங்கள் மூலம் வாங்கும் போது அந்த ஆவணத்தின் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்யப்படுகிறது.
2. நீதிமன்ற உத்தரவுகள் மூலம் கிடைக்கப்பெறும் சொத்துக்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்யப்படுகிறது.
3. ஏற்கனவே தங்களுடைய மூதாதையர்கள் மூலமாக கிடைக்கப்பெறும் சொத்துக்கள் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் இறப்பு மற்றும் வாரிசு சான்று ஆவணங்களின் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்யப்படுகிறது.
