காணி நிலம் (Gani Land)

ஆதி காலத்தில் மனிதன் நாடோடி வாழ்க்கையை விட்டுவிட்டு நிலையாக ஒரு இடத்தில் தங்கி வாழ சொல்லிக்கொடுத்தது நிலம் தான். ஆம் மிருகங்களை வேட்டையாடியும், காய் கனிகளை பறித்து உண்டு வாழ்ந்த மனித இனம் நிலத்தை சமன்படுத்தி ஒரு இடத்தில் உணவு தானியங்களை விளைவித்து அங்கேய பறித்து சாப்பிடலாம் என்ற நிலை, நிலத்தால் மட்டுமே வந்தது. அத்தைய நிலம் தான் மனிதனுக்கு நாகரிக வாழ்க்கையை சொல்லிக்கொடுத்தது.

மனிதனுக்கு நாகரிகத்தை சொல்லிக்கொடுத்த நிலம் தான், மனிதனுக்கு கௌரவத்தை கொடுத்தது. மனிதனுக்கு பொறாமையையும் கொடுத்தது. சகோததரர்களுக்குள் பகையை வளர்த்தது. பாண்டவர்கள் கௌரவர்கள் தொடங்கி தற்போது வரை இந்த பங்காளிகள் யுத்தம் ஓய்ந்த பாடில்லை.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளது என்று அரசு சட்டம் கொண்டுவரும்வரை இந்த சமுகம் பெண்களை ஒரு பொருளாக மட்டுமே பார்த்தது. தற்போது பெண்கள் அனைத்து இடங்களிலிலும் அதிகாரம் செலுத்த, ஆரம்பத்தில் அதிகாரம் அளித்தது நிலம் தான்.

இந்த நிலங்கள் குறித்து உங்களுக்கு உள்ள சந்தேகங்கள் மற்றும் எனது பார்வையில் நிலம் என்பது குறித்து தொடர்ந்து பயனிப்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *